Posts

Showing posts from October, 2017

கிராமக் கணக்கு எண்

கிராமக் கணக்கு எண்   1: இது கிராமத்தின் மாதவாரி-சாகுபடி கணக்கு ஆகும். VAO  பயிராய்வு செய்து ஒவ்வொரு மாதமும் எந்தெந்தப் புலங்களில் பயிர்கள் எந்த மாதத்தில் சாகுபடி செய்யப்படுகிறதோ அதன் விவரங்களை அடங்கலில் பதிய வேண்டும்.   கிராம கணக்கு எண்   1-A: இது சாகுபடி செய்யப்பட்ட வெவ்வேறு பயிரக்ளின் பரப்பையும் ,  விளைச்சல் மதிப்பையும் பற்றிய சுருக்கமான விவரப்பட்டியல் ஆகும். நீர் பாய்ச்சப்பட்ட ,  நீர் பாய்ச்சப்படாத பரப்புகளின் விவரங்கள் தனித்தனியே கலம்   2  முதல்   10  வரை குறிக்க வேண்டும். இந்தக் கணக்கை கணக்கு எண் 1  உடன் பிரதி மாதம்   25- ஆம் தேதிக்குள் வருவாய் ஆய்வாளருக்கு கிராம நிர்வாக அலுவலர் அறிக்கை அனுப்ப வேண்டும்.   கிராம கணக்கு எண்   2: இது கிராம அடங்கல் கணக்கு எனப்படும். அடங்கல் என்பது கைப்பற்று நிலத்தையும் ,  மற்ற அனைத்து வகையான நிலங்களையும் பிரிவுகளாக புலம் உட்பிரிவு வாரியாக அனைத்து விவரங்களும் காட்டும் ஓர் அதிமுக்கியமான கிராமக் கணக்கு ஆக...