கிராமக் கணக்கு எண்

கிராமக் கணக்கு எண் 1:

  • இது கிராமத்தின் மாதவாரி-சாகுபடி கணக்கு ஆகும்.
  • VAO பயிராய்வு செய்து ஒவ்வொரு மாதமும் எந்தெந்தப் புலங்களில் பயிர்கள் எந்த மாதத்தில் சாகுபடி செய்யப்படுகிறதோ அதன் விவரங்களை அடங்கலில் பதிய வேண்டும். 

கிராம கணக்கு எண் 1-A:

  • இது சாகுபடி செய்யப்பட்ட வெவ்வேறு பயிரக்ளின் பரப்பையும்விளைச்சல் மதிப்பையும் பற்றிய சுருக்கமான விவரப்பட்டியல் ஆகும்.
  • நீர் பாய்ச்சப்பட்டநீர் பாய்ச்சப்படாத பரப்புகளின் விவரங்கள் தனித்தனியே கலம் முதல் 10 வரை குறிக்க வேண்டும்.
  • இந்தக் கணக்கை கணக்கு எண்உடன் பிரதி மாதம் 25-ஆம் தேதிக்குள் வருவாய் ஆய்வாளருக்கு கிராம நிர்வாக அலுவலர் அறிக்கை அனுப்ப வேண்டும். 

கிராம கணக்கு எண் 2:

  • இது கிராம அடங்கல் கணக்கு எனப்படும்.
  • அடங்கல் என்பது கைப்பற்று நிலத்தையும்மற்ற அனைத்து வகையான நிலங்களையும் பிரிவுகளாக புலம் உட்பிரிவு வாரியாக அனைத்து விவரங்களும் காட்டும் ஓர் அதிமுக்கியமான கிராமக் கணக்கு ஆகும்.
  • ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் மார்ச் மாதம் வரை உள்ள காலத்திற்கு இக்கணக்கை பராமரிக்க வேண்டும். 

கிராமக் கணக்கு எண் 2-க்கு உள்ளடக்கம்

  • வருவாய்த் துறையின் பொறுப்பின் கீழ் உள்ள அரசு புறப்போக்கில் உள்ள மர விவரங்களை காட்டும் பதிவேடு ஆகும்.இது நான்கு பிரிவுகளாகப் பராமரிக்கப்படும்.
  • அரசுத் தோட்டங்கள்
  • குடிகளுடைய சொந்தத் தோப்புகள்(வருவாய் நில எண். 19-இன் கீழ் அறிவிக்கப்பட்ட நீண்ட கால நிலக் குத்தகைகள்குடிமக்களுடைய சொந்தத் தோப்புகளில்ன் கீழ் வரும்)
  • அரசால் வரிவிதிக்கப்பட்டு அல்லது குத்தகைக்கு விடப்பட்டுஆனால் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தனி மரங்கள்
  • உள்ளாட்சி நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட ஆனால் உள்ளாட்சி      மன்றங்கள் தங்கள் உரிமைகளை விட்டுவிட்ட புறம்போக்கில் உள்ள மரங்கள். 

கிராமக் கணக்கு எண் 2க்கு உள்ளடக்கம்:

  • இது கிராமத்தின் நீர்பாய்ச்சப்பட்ட பரப்பின் விவரங்களை காண்பிக்கும் கணக்கு ஆகும்.
  • இந்தக் கணக்கு ஆண்டு முழுவதும் பராமரிக்க வேண்டும். 

பிரிவு – 1: நதிநீர் பாசன முறைகள் மற்றும் ஏரிகள்:

  • நதிநீர்ப் பாசன முறை
  • ஏரிகள்(நீா்தேக்க திட்டத்தால் நிரப்பப் பெற்றவை தவிர)
  • இதர நீர்ப்பாசன ஆதாரங்கள் 

பிரிவு – 2: கிணறுகள்

  • இந்தக் கணக்கில் ஒவ்வோர் ஆதாரத்துக்கும் நீர் பாய்ச்சக்கூடிய பரப்புநடப்புப் பசலியில் நீர் பாய்ச்சப்பட்ட பரப்புப் பற்றி குறிப்பிடப்பட வேண்டும்.
  • அரசுக்கு சொந்தமான கிணறுகள்தனி நபருக்கு சொந்தமான கிணறுகள் பற்றிய விவரங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.
  • இது ஒரு ‘புள்ளி விவரப் பதிவேடு’ ஆகும்.
  • அரசு நீர்ப்பாசன ஆதாரங்கள் பழுதுபார்க்கப்பட்ட விவரங்கள்செலவழிக்கப்பட்ட தொகைதற்போதைய நிலை ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். கிராமக் கணக்கு 2E நீக்கப்பட்டது 

கிராமக் கணக்கு 2F

  • இது அடங்கலின் 18 – ஆவது கலம் குறிக்கப்பட்டுள்ள விவரங்களின் சுருக்கம் ஆகும்.
  • அவை 1) வனம், 2) பயனற்ற பயிர் செய்ய இயலாத நிலம், 3) விவசாய மற்றும் பயன்படுத்தப்படும் நிலம், 4) பயிரிடத்தக்க தரிக, 5) நிலையான புல்தரை, 6) மரவகை பயிர், 7) நடப்புத் தரிஅ, 8) இதரத் தரிசு நிலங்களைக் காட்டும் பதிவேடு ஆகும். 

கிராமக் கணக்கு எண் 3

  • புலங்களின் பதிவுகளின்(நிலத்தின்) மாறுதல்களை காண்பிக்கும் வருடாந்திர பதிவேடு. இது 4-பிரிவுகளைக் கொண்டது.
  • உரிமையயை விட்டுவிடுதல்(Relinquishment)
  • ஒப்படை(Assignment Land)
  • பட்டா மாறுதல்
  • இதர மாறுதல்களின் போன்றவற்றை குறிப்பதாகும். 

கிராமக் கணக்கு 3A:

  • கணக்கு 3-இல் கைப்பற்று நிலங்களில் ஏற்பட்ட மாறுதல்களின் சுருக்கம் ஆகும்.
  • கணக்கு எண் 3-இன் சுருக்கத்தின் அடிப்படையில் முன்பசலியில் கைப்பற்றில் இருந்தவைகளில் பிரிவு வாரியாககழிவுகளைக் கழித்துபிரிவு வாரியாகச் சேர்த்தவை 

கிராமக் கணக்கு எண் 4:

  • இது அனைத்து அரசிறைக் கழிவு(Beriz Detuction)களைக் காண்பிக்கும்.
  • இவை இரண்டு பிரிவுகளில் பராமரிக்கப்படும்.
  • சமய நிலையங்களுக்காகக் கழிக்கப்படுவது.
  • மற்ற காரியங்களுக்காகக் கழிக்கப்படுவது 

கிராமக் கணக்கு எண் 5(வஜா கணக்கு)

  • பருவநிலை பாதிப்பு அடையும் போது நிலவரி தள்ளுபடி செய்யபட்டு வருகிறது. இது மூன்று பிரிவுகளாகப் பராமரிக்கப்படுகின்றது.
  • பிரிவு – 1: பருவநிலை பாதிப்பு ஏற்படும்போது பயிராய்வுச் செய்யப்படு விளைச்சல் அளவு 25 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் அத்தகைய நேர்வுகளில் வஜா செய்யப்படும் தீர்வை விவரங்கள் இதில் காட்டப்படுகிறது. இத்தள்ளுபடிகள் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் அடிப்படையிலும் வழங்கப்படுகிறது.
  • பிரிவு – 2: நிலையான நிரந்தர தள்ளுபடிகள் அனைத்தும் இதில் காட்டப்படுகிறது.
  • பிரிவு – 3: அசாதாரண நிலையில் பாதிப்பு ஏற்படும் போது வருவாய்நிலை எண் 14-இன் படி நிலவரி தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. 

வஜாக்களின் விவரங்கள்:

  • பிரிவு 5-I, பிரிவு 5-II, பிரிவு 5-III தீர்வை தள்ளுபடி விவர்ங்களைக் கூறுகின்றன.
  • பிரிவு 5-Iஒருபோக நன்செய்யில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீர்ப்பாசன ஆதாரத்தில் தண்ணீர் இல்லாமல்ஏரியில் நீர் வரத்து குறைவானதால் விளைச்சல் 25 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால்தரத்தீர்வை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
  • ஏரியில் நீர் போதாத நிலையில் நன்செய் நிலங்களில் புன்செய் பயிர் சாகுபடி செய்யப்பட்டால் நன்செய்க்கும் புன்செய்க்கும் உள்ள வித்தியாசத் தீர்வை தள்ளிக் கொடுக்க வேண்டும்.
  • பிரிவு 5-II நன்செய் நிலங்கள் நீர்ப்பாசன ஆதாரத்திலிருந்து தன்பாசன முறையாக எடுக்காத நிலையில் இறவை மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய இனங்களில் நிலையான வஜா ஒரு ஏக்கருக்கு ரூ. வீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
  • பிரிவு 5-IIIஅசாதாரண நிலை ஏற்படும் போது வருவாய் நிர்வாக ஆணையரின் பரிந்துரைபேரில் அரசு சிறப்பினமாகக் கருதி முழு நிலவரியையும் தள்ளுபடி செய்ய உத்தரவிடலாம்.
  • இந்தக் கணக்குகளை VAO முறையாகப் பராமரித்து ஜமாபந்தியின் போதுவருவாய்க் கோட்ட அலுவலர் ஒப்புதலுடன் ஜமாபந்தி அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும். 

கிராமக் கணக்கு எண் 6:

  • இப்பதிவேட்டினை 6, 6-A என்று இரண்டு பிரிவுகளாக பராமரிக்க வேண்டும்.
  • தண்ணீர் தீர்வை விதிப்பு பற்றி காட்டும் பதிவேடு ஆகும். பசலி ஜாஸ்திதீர்வை ஜாஸ்தி முறையில் விதிக்கப்படும் அபராதத் கணக்குகள் கணக்கு எண் 6-இல் பராமரிக்கப்படும். 

கிராமக் கணக்கு எண் 6-A உள்ளடக்கம்:

  • ஒவ்வொரு பட்டாதாரராலும் நீர்ப்பாய்ச்சப்பட்ட தண்ணீருக்காக செலுத்தப்பட வேண்டிய கட்டணத்தை கூட்டி வரும் மொத்தத்தை கிராமக் கணக்கு 10-இல் – 2 – பிரிவுக்கு எடுத்துச் செல்லும் பதிவேடாகும். (போஸ்டிங் ரிஜிஸ்டர்). 

கிராமக் கணக்கு எண் 7:

  • அனுமதி இன்றி புறம்போக்குதீர்வை விதிக்கப்பட்ட தரிசு மற்றும் தீர்வை விதிக்கப்படாத தரிசு ஆகிய நிலங்களின் அனுபோகம் செய்யப்படும் புலப்பரப்பையும்பல்வகை வருவாய்களையும் அதற்குண்டான மேல் வரிகளும் காட்டப்படும் பதிவேடு ஆகும். இது இரண்டு பிரிவுகளாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
  • பிரிவு-1: புறம்போக்கு நிலம்தீர்வை ஏற்பட்ட தரிசு மற்றும் தீர்வை ஏற்படாத தரிசு நிலங்களின் ஆக்ரமாணம்விதிக்கப்படும் தீர்வைதண்டத் தீர்வைஉள்ளுவர் மேல்வரிகள் ஆகியவற்றை இதில் கணக்கிட வேண்டும்.
  • பிரிவு-2 : இதர இனங்கள் அதாவது புன்செய் நிலங்களுக்கு விதிக்கப்படும் தீர்வைஜாஸ்தி அபராதம்புறம்போக்கு நிலங்களுக்கு விதிக்கப்படும் தண்ணீர் தீர்வை மற்றும் அபராதமும்மேல்வரிகள் ஆகியவற்றை இதில் காண்பிக்க வேண்டும். 

கிராமக் கணக்கு எண் 8A, 8B:

  • கிராமக் கணக்கு 8 – இரண்டு பிரிவுகளைக் கொண்டது.
  • 8A : முதல் பிரிவு முதல் வகுப்பு நீர் நிலைகளைப் பற்றிய விவரங்கள் .
  • 8B : இக்கணக்கில் மற்ற நீர் நிலைகள் பற்றிய விவரங்கள் அடங்கும்.
  • இக்கணக்கு மூலம் நீர்பாசன ஆதாரத்தின் மூலம் அரசுக்கு வரும் வருவாய்களான தரத்தீர்வைதண்ணீர் தீர்வைதீர்வை ஜாஸ்திஅபராதத் தீர்வைகூடுதல் நன்செய் தீர்வை(Additional Assessment) மற்றும் கூடுதல் தண்ணீர் தீர்வை ஆகியவற்றை இந்தக் கணக்குக்கு கொண்டுவர வேண்டும். 

கணக்கு எண் 9A

  • இந்தக் கணக்கு தமிழ்நாடு கூடுதல் தீர்வை மற்றும் கூடுதல் தண்ணீர் வரி சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் வருவாயினை காண்பிக்கும் பதிவேடு ஆகும்.
  • இக்கணக்கைப் பாய்ச்சல் ஆதாரம் வாரியாக எழுத வேண்டும். 

கணக்கு எண் 10:

  • இந்தக் கணக்கு இரு பிரிவுகளாகப் பராமரிக்கப்படுகிறது. 

கணக்கு – 10 – இல் பிரிவு:

  • பட்டாவாரியான நிலவரி திட்டத்தினைக் காண்பிக்கும் சிட்டாவாகும்.
  • நிலவரி திட்டம் முடிந்தவுடனேயே இக்கணக்கினை மேற்கொண்டு பராமரிப்புக்காக வருவாய்த் துறைக்கு இரண்டு பிரதிகள் வழங்கப்படுகிறது.
  • முதல்பிரதி கிராம நிர்வாக அலுவலரிடமும் இரண்டாம் பிரதி வட்டாட்சியர் அலுவலகத்திலும் பராமரிக்கப்படுகின்றன.
  • இப்பதிவேடு பட்டாவாரியாக எழுதப்பட வேண்டும்.
  • இந்தக் கணக்கை 5-ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுத வேண்டும். 

கணக்கு எண்10-இல் 2-ஆம் பிரிவு:

  • பட்டா வாரியாக கைப்பற்றில் உள்ள நிலங்களுக்கு விதிக்கப்பட வேண்டிய பல்வேறு வகை தீர்வை இனங்களின் விவரத்தைக் காட்டும் பதிவேடாகும்.
  • இந்தப் பதிவேட்டில் பட்டா வாரியான விஸ்தீரணம்தீர்வை தள்ளுபடிகள்நிகரத் தீர்வைபசலி ஜாஸ்திதீர்வை ஜாஸ்திபுன்செய்நன்செய் தீர்வைகழிவுகள்நிகரத் தீர்வைஉள்ளூர் மேல்வரிகள் ஆகியவற்றைக் கணக்கிட வேண்டும். 

கிராமக் கணக்கு எண் 10A:

  • இந்தக் கணக்கு கிராமக் கணக்கு 19-இல் (இறப்பு/பிறப்பு பதிவேடு) பதிவு செய்யப்பட்ட விவரங்களின்படி கைப்பற்றுதாரர் யாரேனும் இறந்துவிட்டால் அவர் பெயரை கைப்பற்றில் இருந்து நீக்கவும் அவருக்குண்டான வாரிசுதாரர்கள் பெயரில் பதிவு செய்யவும் கிராம நிர்வாக அலுவலரால் அனுப்பப்படும் பட்டியல் ஆகும். 

கிராமக் கணக்கு எண் 10C:

  • இது இரண்டு பிரிவுகளாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
  • பிரிவு-1 : வருவாய்ப் பதிவுகளை மாற்றக் கோரி பெறப்படும் விண்ணப்பங்களை வட்டாட்சியரால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அனுப்புவது குறித்தான பதிவேடாகும்.
  • பிரிவு-2 : கிராம நிர்வாக அலுவலர் தன்னிச்சையாக இதே போன்ற இனங்களில் பெறப்படும் மனுக்களைக் காட்டும் பதிவேடாகும். 

கிராமக் கணக்கு எண் 11:

  • ஒவ்வொரு பட்டாதாரருக்கும் அளிக்கப்பட்ட பட்டா படிவமாகும்.
  • தற்போடு கிராமக் கணக்கு எண் 10-இல் 1-கணினி மயமாக்கப்பட்டதால் பட்டா மாறுதல் செய்யும் போது கணினி மூலம் பட்டா நகல் படிவம் கைப்பற்றுதாரருக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

கிராம கணக்கு எண் 12:

  • கிராமம் முழுமைக்கும் உள்ள நில வருவாய் நிர்ணயச் சுருக்கமாகும்.
  • இது கணக்கு எண் 2, 3A, 5, 6, 7, 9A, 10(1), 10(2) ஆகியவைகளில் உள்ள தொகுப்புகளை இதில் பதிய வேண்டும். 

கிராமக் கணக்கு எண் 13:

  • இது கிராமங்களில் தினசரி வசூல்களைக் காண்பிக்கும் கணக்காகும்.
  • பட்டாதாரர்கள் நிலவரி அரசுக் கடன்கள் மற்றும் இதர பாக்கிகளை செலுத்தியவுடன் பணம் செலுத்தியதற்காக அவர்களுக்கு பற்று சீட்டு வழங்க வேண்டும்.
  • அந்த பற்றுச் சீட்டில் கண்டுள்ள விவரங்களின் படி தினசரியாகும் வசூல்களை இனம் வாரியாக தனித்தனி சிட்டாக்களில் வருவாய் கிராமம் வாரியாக பதிய வேண்டும்.
  • தினந்தோறும் இந்தக் கணக்கை முடிக்க வேண்டும். 

கிராமக் கணக்கு எண் 14:

  • ஒவ்வொரு நபரிடமிருந்து(பட்டாதாரர்) வசூலிக்கப்பட்ட தொகையைக்      காண்பிக்கக் கூடிய 13-ஆம் எண் கணக்கின் சுருக்கமாகும்.
  • இந்தக் கணக்கில் ஒவ்வொரு பட்டாதாரருக்கும் ஒவ்வொரு பக்கம் – ஒதுக்கி அதில் அவர் செலுத்த வேண்டிய முந்தைய பசலி வரையில் உள்ள கேட்பினை பதிவு செய்து அவர் செலுத்திய விவரத்தினை இதில் பதிய வேண்டும். 

கிராமக் கணக்கு எண் 14A உள்ளடக்கம்:

  • 14A கணக்கு என்பது 14 – ஆம் நம்பர் படிவத்திலேயெ தயாரிக்கப்படும் சுருக்கமாகும்.
  • பசலி முடிவில் கிராம ரொக்க கணக்குகளை பதிவு செய்திட வேண்டும். 

கிராமக் கணக்கு எண் 14B:

  • வசூலிக்க இயலாதென கருதப்பட்ட பாக்கி விவரங்களை தெரிவிக்கும் விவரப்பட்டியல் ஆகும். 

கிராமக் கணக்கு எண் 14C:

  • இந்தக் கணக்கு அதிக வசூல் விவரங்களை காண்பிக்கும் கணக்காகும். இது மூன்று பிரிவாகப் பராமரிக்கப்படுகிறது.
  • பிரிவு – 1 : பசலியிலிருந்து அந்தந்த பட்டாதாரர்கள் கேட்புத் தொகைகளுக்கு மிகுதியாக செலுத்திய தொகை விவரம் ஆகும்.
  • பிரிவு – 2 : வசூல் செய்யப்பட்ட தொகை மிகுதியாக இருந்தால் அதே பட்டாதாரருக்கு அடுத்த பசலியில் கேட்பு இல்லாத பட்சத்தில் அந்தத் தொகையை அவருக்கு திருப்பிக் கொடுக்கலாம். இவ்வாறான விவரங்கள் இதில் காட்டபடுகின்றன.
  • பிரிவு – 3 : இந்தப் பிரிவில் ஒரு பட்டாதாரர் செலுத்திய தொகையில் 10 பைசாவுக்கும் கீழ் மிகுதியாக இருந்தால் அதனை அரசுக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். 

கிராமக் கணக்கு எண் 15:

  • கிராமத்தில் பட்டாதாரர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட தொகைகள்(கிராமக் கணக்கு எண் 13-இன் படி) வங்கியில் செலுத்துவதற்குப் பராமரிக்கப்படும் சுருக்கமான பட்டியலாகும்.
  • இவற்றை வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்யும் போது 13- ஆம் கணக்கு விவரப்படி சரிபார்த்து வங்கியில் செலுத்த அனுமதிக்கப்படுகிறது.
  • நடைமுறையில் இருசால் நாமா – 15-க்கு பதில் செலான் நாமா தயாரிக்கப்பட்டு பணம் செலுத்தப்படுகிறது. 

கிராமக் கணக்கு எண் 16:

  • பசலி வாரியாக ஒவ்வொரு மாதக் கடைசியிலும் ஒவ்வொரு பட்டாதாரர் செலுத்த வேண்டிய கேட்பு வசூல் பாக்கியைக் காண்பிக்கும் கணக்காகும்.
  • மாதந்தோறும் இந்தக் கணக்கை தயாரிக்க வேண்டும்.
  • இதில் நிலவரிஉள்ளூர் மேல்வரிஉள்ளூர் மிகுமேல்வரி ஆகிய விவரங்களை பசலி வாரியாக தனித்தனியாகக் கணக்கிட வேண்டும். 

கிராமக் கணக்கு எண் 17:

  • ஒரு பட்டாதாரர் செலுத்த வேண்டிய நிலவரித் தொகை தாமதமாக செலுத்தினால் இதற்கு வட்டியாக அபராதம் வசூலிக்கப்படுகிறது.
  • இவை பதிவேட்டில் அதற்குண்டான கேட்புவசூல்பாக்கி ஆகிய விவரங்கள் காண்பிக்கப்படும்.
  • நிலவரி பாக்கியானது அந்தந்த பசலி ஆண்டில் செலுத்த வேண்டும்.
  • அவ்வாறு செலுத்தத் தவறிய காரணத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 100-க்கு 5ரூ வீதம் வட்டியாக அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
  • இவை 4-பிரிவுகளாகப் பராமரிக்கப்படுகிறது.
    (1)
    நிலவரி (2) மேல்வரி (3)உள்ளூர் மிகுமேல்வரி (4)தனி நிதிகள். 

கிராமக் கணக்கு எண் 18:

  • குடியானவர்கள் தாம் செலுத்த வேண்டிய நிலவரி மற்றும் இதர பாக்கிகளுக்கு அவர்களால் செலுத்தப்பட்ட தொகையைப் பெற்று கொண்டதற்கு VAO வழங்கும் பற்று சீட்டு ஆகும். 

கிராமக் கணக்கு எண் 19:

  • VAO ஒவ்வொர் ஊராட்சிக்குட்பட்ட வருவாய் கிராமங்களில் நேரிடும் பிறப்புஇறப்பு பதிவு செய்ய பதிவாளராக VAO நியமிக்கப்பட்டுள்ளார்.(Town Panchayat தவிர) இந்தக் கணக்கை புதிய வடிவத்தில் தயாரிக்க வேண்டும். 

கிராமக் கணக்கு எண் 20:

  • இது மழைக் கணக்கு ஆகும்.ஏப்ரல் முதல் மார்ச் வரை உள்ள நிதி ஆண்டு காலத்தில் பராமரிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு மாதமும் 25-ஆம் தேதி முதல் இக்கணக்கின் முடிவை தெரிவிக்க வேண்டும். 

கிராமக் கணக்கு எண் 21:

  • இது பட்டதாரர் அல்லது மற்றவர்களுக்கு சொந்தமான கால்நடைகள் குறித்தான கணக்கு.
  • கால்நடைகளின் புள்ளி விபரங்களை 5-ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கிட வேண்டும். 

கிராம கணக்கு எண் 22 நீக்கப்பட்டது


கிராமக் கணக்கு எண் 23:

  • இது கிராமத்தில் ரயத்துவாரி உரிமை முறையில் உள்ள பலவகை மதிப்புள்ள கைப்பற்றுகளின் எண்ணிக்கையை காண்பிப்பதாகும்.
  • இந்தக் கணக்கை ஆண்டுதோறும் VAO பராமரிக்க வேண்டும். 

கிராமக் கணக்கு எண் 24:

  • இது கிராமத்தில் உற்பத்திச் செய்யப்படும் கனிமங்களைப் பற்றி பதியும் ஆண்டுப் பதிவேடு ஆகும்.
  • இந்தக் கணக்கை ஜனவரி முதல் டிசம்பர் வரை பராமரிக்க வேண்டும்.
  • இது அந்தக் கிராமத்தில் உள்ள கனிமங்களின் விவரங்கள் மற்றும் அதன் மூலம் பெறப்படும் வருவாய் ஆகிய விவரங்கள்



Comments

Popular posts from this blog

கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள்

வருவாய் நிர்வாகத்தில் கிராம நிர்வாக அதிகாரியால் கையாளப்படும் அ. பதிவேடு , பட்டா , சிட்டா , அடங்கல்